Nubia Red Magic 3S பிளிப்கார்ட்டில் எக்கச்சக்கமான அறிமுக சலுகையுடன் விற்பனை ஆரம்பம்.

Nubia Red Magic 3S  பிளிப்கார்ட்டில் எக்கச்சக்கமான  அறிமுக சலுகையுடன் விற்பனை ஆரம்பம்.

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் நுபியா ரெட் மேஜிக் 3 எஸ் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த சாதனத்தை ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். இந்த கேமிங் சாதனம் முதன்முதலில் இந்தியாவில் இருந்து சீனாவில் தொடங்கப்பட்டது, அங்கு பயனர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமானது சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ செயலி. மேலும், இந்த சாதனம் கூலிங் பிசி அல்லது லேப்டாப் போன்ற கூலிங் பேன் அமைப்பைக் கொண்டுள்ளது.

விற்பனை மற்றும் அறிமுக சலுகை 

Nubia Red Magic 3S  ஸ்மார்ட்போன் மெக்கா சில்வர், சைபர் ஷேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 47,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி ஆன இன்று  ப்ளி்ப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

சலுகைகளைப் பற்றி பேசினால் , பிளிப்கார்ட் SBI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது.

Nubia Red Magic 3S  சிறப்பம்சங்கள்:

– 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– 675 மெகாஹெர்ட்ஸ் அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.1
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், முன்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 27 வாட் 27W QC4.0, யு.எஸ்.பி.-பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழஙஅகப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 Mah . பேட்டரி மற்றும் 27 வாட் குவிக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo