நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பு அம்சங்கள்

நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பு அம்சங்கள்
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 16MB ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. இப்போது நோக்கியா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நோக்கியா 7 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் க்ளாஸ் பிளாக் மற்றும் மாட் ஒயிட் நிறங்களில் வெளிவந்தது. மேலும் இப்போது மாறுபட்ட மாட் ஒயிட் நிறங்களில் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு  இன்று முதல் துவங்குகிறது. 

மாறுபட்ட மாட் ஒயிட் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் .19,482-எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் IPS டிஸ்பிளே டிஸைன் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் ரெஸலுசன் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். 

நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 ப்ரோசெசர் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 அப்டேட்  கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 

இந்த ஸ்மார்ட்போனில் 16MB ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் 3000MAH  பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo