NOKIA 6.2 ஸ்மார்ட்போன் 48மெகாபிக்ஸல் கேமராவுடன் வியாழன் கிழமை அறிமுகமாகும்.

NOKIA 6.2  ஸ்மார்ட்போன்  48மெகாபிக்ஸல் கேமராவுடன் வியாழன் கிழமை அறிமுகமாகும்.
HIGHLIGHTS

ஜூன் 6 ஆம் தேதி நோக்கியா 6.2 என்கிற நோக்கியா X71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம்

இந்திய மதிப்பில் ரூ.20,200) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HMD . குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி நோக்கியா 6.2 என்கிற நோக்கியா X71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் டீசர்களை வெளியிட்டது.இருப்பினும் , இந்த டீசர்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், நோக்கியா அநியூ என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக நிகழ்வு நடைபெறும் அதே நாளில் இந்தியாவிலும் நோக்கியா நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்திய சந்தைக்கென சில அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. நோக்கியா அநியூ ட்விட்டர் பதிவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளை போன்று 290 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் நோக்கியா X71 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை மெட்டல் கிளாஸ் சான்ட்விச் வடிவமைப்பும் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சான்று பெற்ற 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்படுகிறது.

இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும் இதே விலைப்பட்டியலில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் நோக்கியா X71 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo