Realme யின் அடுத்த ஸ்மார்ட்போன் REalme 4 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும்.

Realme  யின் அடுத்த ஸ்மார்ட்போன் REalme 4 ப்ரோ என்ற  பெயரில் அறிமுகமாகும்.
HIGHLIGHTS

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 அல்லது ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இதன் அம்சங்கள் சீன சந்தையை விட சற்று வேறுபடலாம் என்றும் கூறப்படுகிறது

இந்தியாவில் ஒப்போவின் சப் பிராண்டாக ரியல்மி கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. அறிமுகமான சில நாட்களில் Realme  அதிக பிரபலமாகிவிட்டது. 

முதற்கட்டமாக ஆன்லைன் பிராண்டாக அறிமுகமாகி தற்சமயம் ஆஃப்லைன் சந்தை மற்றும் சர்வதேச சந்தையிலும் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த மாதம் ரியல்மி பிராண்டு சீனாவில் ரியல்மி X ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இத்தாலி நாட்டில் அறிமுகமானது.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரியல்மி 4 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ரியல்மி 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 அல்லது ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இதன் அம்சங்கள் சீன சந்தையை விட சற்று வேறுபடலாம் என்றும் கூறப்படுகிறது

இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் என்ட்ரி-லெவல் ரியல்மி C2 மாடலுடன் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் தான் ரியல்மி X ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ரியல்மி X பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo