MI யின் வளைந்த ஸ்க்ரீன் உடன் விரைவில் அறிமுகம்.
சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 5ஜி கான்செப்ட் போன், Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இதே நிகழ்வில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Surveyமுன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. சாம்சங் சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் MIUI 11 வழங்கப்படும் என கூறப்பட்டது.
சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும் இது சியோமி ஏற்கனவே காட்சிப்படுத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
இவற்றுடன் சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி MIUI 11, Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை வையர்டு சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங், வையர்டு ஒ.டி.ஜி. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile