இனி ஆப்பிள் போன்களிலும் ஸ்மார்ட் பென்சில் அம்சம்.

HIGHLIGHTS

இனி ஆப்பிள் போன்களிலும் ஸ்மார்ட் பென்சில்  அம்சம்.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை பென்சில் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் இது தெரியவந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இது பயனர் பென்சிலை பிடித்திருக்கும் விதத்தை கொண்டு அம்சங்களை இயக்க வழி செய்யும் என தெரிகிறது.மூன்றாம் தலைமுறை ஆப்பிள் பென்சிலில் மேம்பட்ட ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டைலசில் வளையும் தன்மையில் டச் சென்சிட்டிவ் பகுதி இருப்பாக காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனரின் விரல் நுனி அப்பகுதியில் பதியும் தன்மைக்கு ஏற்ப பல்வேறு ஜெஸ்ட்யூர்களை புரிந்து கொள்ளும். மேலும் ஆப்பிள் பென்சிலில் கேமரா ஒன்றும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தும் போது வெவ்வேறு பகுதிகளை ஐபேட் திரையில் ஒளிபரப்பும் பணியை செய்யும்.

மற்ற ஸ்டைலஸ் சாதனங்களை போன்று ஆப்பிள் பென்சில் 2 கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்புகளை எடுத்தல், திரையில் எழுதுவது, யூசர் இன்டர்ஃபேசில் நேவிகேட் செய்யலாம். 

இத்துடன் ஆப்பிள் பென்சிலில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது சாதனத்தை அன்லாக் செய்வதில் துவங்கி ஆப்பிள் பே சேவைக்கு பயோமெட்ரிக் விவரங்களை உறுதிப்படுத்தும். முன்னதாக 2018-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது பென்சில் 2 சாதனத்தை அப்டேட் செய்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile