Motorola Razr 2 தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.
ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்படலாம் என தெரிகிறது
ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்படலாம் என தெரிகிறது
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்படலாம் என தெரிகிறது, எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
Surveyதற்போதைய மோட்டோரோலா ரேசர் சீரிஸ் போன்களின் கேமரா சிறப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய தலைமுறை ரேசர் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் 48 எம்பி பிரைமரி கேமராவும் முன்புறம் 20 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டி வழங்க புதிய ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு, வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
