Motorola புதிய போல்டபில் மற்றும் Buds அறிமுகம் இது Swarovski க்ரிஸ்டல் போன் சும்மா டைமன்ட் போல ஜொலிக்குது

Motorola புதிய போல்டபில் மற்றும் Buds அறிமுகம் இது Swarovski க்ரிஸ்டல் போன் சும்மா டைமன்ட் போல ஜொலிக்குது

Motorola அதன் Motorola Razr 60 Swarovski Edition இந்தியாவில் அறிமுகம் செய்தது இதனுடன் மிக ப்ரம்மதமான டிசைனில் Moto Buds Loop அறிமுகம் செய்துள்ளது இதன் டைமன்ட் போன்ற பளிச் என look தர இந்த போனில் Swarovski க்ரிஸ்டல் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் ப்ரீமியம் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Razr 60 Swarovski Edition சிறப்பம்சம்.

Motorola போனின் புதிய ஸ்மார்ட்போன் பற்றி பேசினால், இந்த போனில் 3.63-இன்ச் pOLED கவர் ஸ்க்ரீன் உடன் வருகிறது. அதே நேரத்தில் 6.9-இன்ச் pOLED LTPO ப்ரைமரி போலடபில் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. Razr 60 Swarovski எடிஷனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 13MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP முன் பேஸிங் கேமரா உள்ளது.

பேட்டரியைப் பற்றிப் பேசுகையில், இது 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 30W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. நீங்கள் இதை பான்டோன் ஐஸ் மெல்ட் நிறத்தில் வாங்கலாம். இதனுடன், நிறுவனம் Swarovski க்ரிஸ்டல் மூலம் அலங்கரிக்கப்பட்ட Moto Buds Loop இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Moto Buds Loop அம்சம்

ஸ்மார்ட்போனுடன், நிறுவனம் போஸுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மோட்டோ பட்ஸ் லூப் ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தியது. இயர்பட்கள் ஸ்பேஷியல் சவுண்ட், 12மிமீ இரும்பு இல்லாத டிரைவர்கள் மற்றும் தெளிவான அழைப்புகளுக்காக கிரிஸ்டல்டாக் AI ஆல் சப்போர்ட் இரட்டை மைக் அமைப்புடன் திறந்த காது வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்த சாதனம் மோட்டோ AI மற்றும் ஸ்மார்ட் கனெக்டையும் ஆதரிக்கிறது மற்றும் வியர்வை மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

இயர்பட்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பிளேபேக்கையும், சார்ஜிங் கேஸுடன் மொத்தம் 39 மணிநேரம் வரை பிளேபேக்கையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. 10 நிமிட சார்ஜ் செய்தால் 3 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்க முடியும்.

இதையும் படிங்க:MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion ஒரே நேரத்தில் இரண்டு போனிலும் ஆபர் எத வாங்குறது ஒரே குழப்பம் அப்ப இத பாருங்க

Motorola Razr 60 Swarovski Edition விலை

Motorola Razr 60 Swarovski Edition விலை இந்தியாவில் ரூ.49,999 ஆகவும், மோட்டோ பட்ஸ் லூப் விலை ரூ.24,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காம்போ சலுகையில், நீங்கள் இரண்டு சாதனங்களையும் ரூ.64,999க்கு பதிலாக ரூ.59,999க்கு வாங்கலாம். இந்த டிச்வைஸ் விற்பனை செப்டம்பர் 11 முதல் தொடங்கும். இவற்றை ஆன்லைனில் பிளிப்கார்ட் அல்லது சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.

Moto Buds Loop விலை தகவல்

Moto Buds Loop ஒரு சில்வர் கலரில் இந்த பட்ஸ் Swarovski crystals பதித்து இருப்பதால் இதன் விலை ரூ,24,999 ஆக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo