Motorola யின் போல்டப்ல் சீரிஸ் ரக ரகமா அறிமுகம், Ai முதல் டிசைன் வரை அனைத்தும் சூப்பர்

Motorola யின் போல்டப்ல் சீரிஸ் ரக ரகமா அறிமுகம், Ai முதல் டிசைன் வரை அனைத்தும் சூப்பர்
HIGHLIGHTS

motorola Razr 60 (Razr 2025) மற்றும் Razr 60 Ultra (Razr Ultra) உலக சந்தையில் அறிமுகம்

இந்த போனுடன் இதில் Motorla razr+ (2025) அறிமுகம் செய்யப்பட்டது

இந்த Motorola போல்டபில் போன் அம்சங்கள் விலை மற்றும் பல தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Motorola அதன் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் motorola Razr 60 (Razr 2025) மற்றும் Razr 60 Ultra (Razr Ultra) உலக சந்தையில் அறிமுகம். ஏற்கனவே கூறியது படி இந்த போல்டபில் போனில் இரண்டு செக்மன்டிலும் மிக சிறப்பனதாக மாற்ற இதில் வேற லெவல் அம்சங்கள் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனுடன் இதில் Motorla razr+ (2025) அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இப்பொழுது அறிமுகம் இந்த Motorola போல்டபில் போன் அம்சங்கள் விலை மற்றும் பல தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Motorola Razr 60 சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே :- இந்த போனின் இன்டெர்னல் டிஸ்ப்ளே 6.96-இன்ச் (1080×2640 பிக்சல் ) FlexView FHD+ pOLED LTPO கொண்ட டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

இதன் வெளிப்புற டிப்ளே பற்றி பேசுகையில் இதில் 3.63-इंच (1056×1066 பிக்சல்) QuickView pOLED 90Hz LTPS டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இது 1700 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் Corning Gorilla Glass Victus ப்ரோடேக்சன் வழங்குகிறது

ப்ரோசெசர்:-இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 7400X 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் Mali-G615 MC2 GPU உடன் வருகிறது

ரேம் ஸ்டோரேஜ்: இந்த போனில் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா :இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP மெயின் கேமரா f/1.7 அப்ரட்ஜர் உடன் OIS, 13MP அல்ட்ரா வைட் கேமரா f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது இதனுடன் இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா உடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது

பேட்டரி:- மேலும் இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4500mAh பேட்டரி உடன், 30W TurboPower பாஸ்ட் சார்ஜிங் 15W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டி:- இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G SA/NSA, டுயல் 4G VoLTE, Wi-Fi 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, Bluetooth 5.3, GPS, USB டைப்-C மற்றும் NFC போன்ற சப்போர்ட் வழங்குகிறது.

Motorola Razr 60 விலை தகவல்

  • Razr 60 / Razr (2025) நிறுவனம் Gibraltar Sea, Spring Bud, Lightest Sky மற்றும் Parfait Pink கலரில் வாங்கலாம்
  • Razr 60 / Razr (2025) நிறுவனத்தால் USD 700 (தோராயமாக ₹59,700) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த போன் மே 7 முதல் அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கேரியர்களில் மே 15 முதல் விற்பனைக்கு வரும்.

Motorola Razr 60 Ultra சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே :- இதில் உட்புற டிஸ்ப்ளே இதில் 7-இன்ச் (1224×2992 பிக்சல்) ரெசளுசன் FlexView 1.5K pOLED LTPO டிஸ்ப்ளே உடன் இதில் 1-165Hzரெப்ராஸ் ரேட் Dolby Vision, 4000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது

இதன் வெளிப்புற டிஸ்ப்ளே இதில் 4-இன்ச் (1272×1080 பிக்சல் ) QuickView pOLED LTPO டிஸ்ப்ளே உடன் இதில் 1-165Hz ரெப்ராஸ் ரெட்டுடன் Corning Gorilla Glass Ceramic ப்ரோடேக்சன் வழங்குகிறது.

ப்ரோசெசர் : இந்த போனில் பெரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Snapdragon 8 Elite 3nm மொபைல் பிளாட்பாரம் உடன் Adreno 830 GPU வழங்கப்பட்டுள்ளது.

ரேம் ஸ்டோரேஜ் :- இந்த போனில் 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது.

கேமரா: இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 50MP மெயின் OIS கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் 50MP செல்பி கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

பேட்டரி : இதில் பேட்டரி பற்றி பேசுகையில் பேட்டரியுடன் 4700mAh 68W TurboPower பாஸ்ட் சார்ஜிங் 30W வயர்லஸ் சார்ஜிங் வழங்குகிறது.

கனெக்டிவிட்டி:- இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் SA/NSA, டுயல் 4G VoLTE, Wi-Fi 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, Bluetooth 5.4, GPS, USB Type-C மற்றும் NFC உடன் வருகிறது.

Motorola Razr 60 Ultra விலை தகவல்.

நிறுவனம் Razr 60 Ultra / Razr Ultra को Rio Red, Scarab, Mountain Trail மற்றும் Cabaret கலர் ஆப்சனில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் விலை பற்றி பேசுகையில் இது Razr 60 Ultra / Razr Ultra ஆரம்ப விலை USD 1,300 (சுமார் ₹1,10,870)ரூபாய் வைக்கப்பட்டுள்ளது

Motorola Razr+ (2025) சிறப்பம்சம்

அமெரிக்க சந்தையைப் பொறுத்தவரை, மோட்டோரோலா ஒரு புதிய Razr + (2025) மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது வடிவமைப்பு மற்றும் காட்சி அடிப்படையில் Razr (2025) ஐப் போன்றது, ஆனால் அதில் சில முக்கியமான மேம்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடல் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 செயலியைப் பயன்படுத்துகிறது, இது செயல்திறனை இன்னும் சிறப்பாக்குகிறது. கேமரா அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும், இது ஜூம் மற்றும் போர்ட்ரெய்ட் போட்டோஎடுப்பதில் நன்மை பயக்கும்.

அதே நேரத்தில், பேட்டரி திறன் 4,000mAh ஆகும், இது 45W டர்போபவர் வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . ஒட்டுமொத்தமாக, இந்த சாதனம் அமெரிக்க பயனர்களுக்கு அதிக பர்போமான்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள

Motorola Razr+ (2025) விலை தகவல்

Razr+ (2025) நிறுவனம் Mocha Mousse மற்றும் Hot Pink கலரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை USD 1,000 (சுமார் ₹85,285) இருக்கும்.இது அமரிக்காவில் ஜூன் 3 விற்பனைக்கு வரும்.

இதையும் படிங்க:ஸ்னப்ட்ரகன் 8 Gen 3 ப்ரோசெசருடன் OnePlus 13T அறிமுகம் இதன் விலை என்ன பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo