Motorola razr மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பல அசத்தும் கண் கவரும் டிசைன் உடன் அறிமுகம்.

Motorola razr  மடிக்கக்கூடிய  ஸ்மார்ட்போன்  பல அசத்தும் கண்  கவரும் டிசைன் உடன் அறிமுகம்.

லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு ரேசர் 2019 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. மோட்டோரோலா ரேசர் என அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது

புதிய மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போனின் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,07,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

மோட்டோரோலா Motorola razr   2019 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
– 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
– 6 ஜி.பி. பேம்
– 128 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. f/1.7 கேமரா
– 5 எம்.பி. கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
– 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
– இசிம் வசதி
– ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை

.இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது. 

இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo