மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மோட்டோ இ 7 பவர் 2 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மூலம் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நாட்டில் கிடைத்துள்ளது. தொலைபேசியில் 6.5 மேக்ஸ் விஷன் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. மோட்டோ இ 7 பவர் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
MOTO E7 POWER புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஐபி52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் மோட்டோ இ7 பவர் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.
MOTO E7 POWER ஸமார்ட்போன் டஹிட்டி புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile