பன்ச் ஹோல் செலஃபீ கேமராவுடன் Motorola One Vision ஸ்மார்ட்போன் அறிமுகம்.

பன்ச் ஹோல்  செலஃபீ  கேமராவுடன் Motorola One Vision ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 1080×2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 Mah  பேட்டரி
– 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும்.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு அப்டேட்கள் நிச்சயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சாரும் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3500 Mah . பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் கிரேடியன்ட் அல்லது பிரான்ஸ் கிரேடியன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo