Moto G8 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Moto G8 ஸ்மார்ட்போன்  பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து Moto G8  பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

விளம்பர வீடியோவின் படி மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. + 4 எம்.பி. சென்சார் மற்றும் ஏ.ஐ. அம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி8 பிளாக், ரெட் மற்றும் புளு என மூன்று நிறங்களில் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் மோட்டோ ஜி8 விளம்பர வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. ஆக்‌ஷன் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர மோட்டோ ஜி8 சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் மோட்டோ ஜி8 பிளஸ் மாடலை விட புதிய மோட்டோ ஜி8 குறைந்த திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo