Xiaomi Mi Mix 3 ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன் அறிமுகமாகலாம்…!

Xiaomi Mi Mix 3 ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன் அறிமுகமாகலாம்…!
HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 15-ம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

சீனாவின் பிரபல சோசியல் வெப்சைட்டில் லீக் ஆகியுள்ள விவரங்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வுக்கான கவுன்ட்-டவுன் துவங்கி இருக்கிறது. இதனுடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

சீன வெப்சைட்டிகள் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயங்கும் என தெரியவந்துள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக Mi MIX 3 இருக்கும்.

Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, முந்தைய Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் இருந்ததை விட பெரிய ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிரத்யேக 5ஜி மோடெம் வழங்கப்படும் என்றும் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. + 20 எம்.பி. + 13 எம்.பி. மூன்று கேமரா யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 3850 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

மேலும் 3.5 mm . ஹெட்போன் ஜாக், மைக்ரோ usb  போர்ட் மற்றும் ஸ்டோரேஜை கூடுதலாக நீட்டிக்க மைக்ரோ SD . கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. சியோமி முன்னதாக அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மிக்ஸ் 2எஸ் மாடலில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மைக்ரோ USB . போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo