ஒப்போவின் சப் ப்ராண்டாக மாறும் Oneplus

ஒப்போவின் சப் ப்ராண்டாக மாறும்  Oneplus
HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்பட இருப்பதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன

ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்

ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்பட இருப்பதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இரு நிறுவனங்கள் இணைப்பு எப்படி இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என கூறப்படுகிறது.

இரு நிறுவனங்கள் இணைந்த பின், அதிக ஊழியர்கள் எண்ணிக்கையுடன் மேலும் சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இதுபற்றிய விவரங்களை ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் செய்தி பிரிவு அறிக்கையின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி இரு நிறுவனங்கள் இணைப்புக்கு பின் ஒப்போ நிறுவனத்தின் அங்கமாக ஒன்பிளஸ் மாறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo