LG K8 2018 மற்றும் K10 2018 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

HIGHLIGHTS

LG நிறுவனத்தின் K8 2018 மற்றும் K10 2018 என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

LG K8 2018 மற்றும் K10 2018 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

LG நிறுவனம் புதிய K8 மற்றும் K10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு முன் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் K8 2018, K10 2018, K10 பிளஸ் 2018 மற்றும் K1௦ 2018 ஸ்மார்ட்போன்களும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் எல்ஜி அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 2.5D ஆர்க் கிளாஸ் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. K8 ஸ்மார்ட்போனில் மெட்டல் வடிவமைப்பு மற்றும் மெட்டல் யு-ஃபிரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கேமரா தொழில்நுட்பம் எல்ஜி ஜ6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு கேமராக்களிலும் பொக்கே அம்சம் கொண்டுள்ளது. 

ஸ்மார்ட் ரியர் கீ எனும் புதிய அம்சம் ஸ்மார்ட்போனினை கைரேகை சென்சார் மூலம் மிக வேகமாக அன்லாக் செய்கிறது. இத்துடன் போட்டோக்களை வேகமாக படமெடுக்கவும், ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் இந்த அம்சம் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எல்ஜி K8 ஸ்மார்ட்போனில் ஆட்டோ ஷாட், ஜெஸ்ட்யூர் ஷாட், செல்ஃபிக்களுக்கான ஃபிளாஷ், க்விக் ஷேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

LG K8 (2018) சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஆன்-செல் டச் 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
– சிங்கிள் / டூயல் சிம்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா (K10 α)
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

LG K10 (2018) சிறப்பம்சங்கள்:

– 5.3 இன்ச் 1280×720 பிக்சல் ஆன்-செல் டச் 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
– 2 ஜிபி, 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
– சிங்கிள் / டூயல் சிம்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
எல்ஜி K8 2018, எல்ஜி K10 2018 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அரோரா பிளாக், மொராக்கன் புளூ மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இவை ஐரோப்பியா, ஆசியா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo