LG VELVET ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ரோப் நோட்ச் டிஸ்பிளே உடன் வரும். லீக் விவரம்.

HIGHLIGHTS

புதிய எல்ஜி வெல்வெட் அதிக மென்மையாகவும், பிரீமியம் அனுபவத்தை கொண்டது எ

LG VELVET ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ரோப் நோட்ச் டிஸ்பிளே உடன் வரும். லீக்  விவரம்.

LG நிறுவனம் தனது வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வு மூலம் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை எல்ஜி நிறுவனம் 15 விநாடிகள் ஓடும் வீடியோ டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 5ஜி வசதி, வாட்டர் டிராப் நாட்ச், 3டிஆர்க் டிசைன் மற்றும் ரெயின்டிராப் கேமரா வழங்கப்பட இருப்பதை எல்ஜி ஏற்கனவே உறுதிப்படுத்தி இருக்கிறது. 

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா சென்சார்கள் ரெயின்டிராப் வகையில் பொருத்தப்படுகிறது. புதிய வெல்வெட் சாதனம் பார்ப்பதற்கும் கையில் வைத்து பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

மொபைல் சாதனங்களில் புதிய பிராண்டிங் பெறும் எல்ஜி நிறுவனத்தின் முதல் சீரிஸ் ஆக எல்ஜி வெல்வெட் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு எண் அடிப்படையில் பெயரிடும் வழக்கத்தை மாற்றி பிரபலம் மற்றும் கவர்ச்சிகர பெயர்களை சூட்ட எல்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தோற்றத்தில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக இருக்கும். சிறப்பம்சங்களள் தற்போதைய வழக்கத்தையொட்டி  இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒரே வடிவமைப்பை தழுவி அதிக மாடல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில், எல்ஜி வெல்வெட் முற்றிலும் புதிதாக இருக்கும்.

புதிய எல்ஜி வெல்வெட் அதிக மென்மையாகவும், பிரீமியம் அனுபவத்தை கொண்டது என்பதை தெரியப்படுத்தும் நோக்கில் சூட்டப்பட்டு இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile