LG V40 ThinQ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராவுடன் அறிமுகம் –

HIGHLIGHTS

புதியLG. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது

LG V40 ThinQ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராவுடன் அறிமுகம் –

LG  நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் V 40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதியLG. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய LG ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐந்து கேமரா செட்டப் இருக்கிறது. LG V40  ThinQ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள்: 16 MP 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு ஆங்கிள் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X சூம் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கேமராக்களில் உள்ள டிரிபில் ஷாட் அம்சம் புகைப்படங்களை ஒன்றாக அடுக்கி, சிறிய வீடியோ போன்று உருவாக்கும். இதனை பயனர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 5 MP வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8 MP . ஸ்டான்டர்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா ஆப் திறக்கும் போது ஸ்கிரீனில் காணப்படும் ஸ்லைடர் கொண்டு பொக்கே எஃபெக்ட் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் PDAF அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இது 50% வேகமாகவும் மேம்படுத்தப்பட்ட HDR  அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

LG V40 ThinQ சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ எல்.ஜி. UX
– 12 எம்.பி. கேமரா, f/1.5, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm பிக்சல், 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm பிக்சல், 45° லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.12μm பிக்சல், 80° லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல், 90° வைடு ஆங்கில் லென்ஸ்
– கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹை-பை குவாட் DAC
– DTS: X 3D சரவுன்டு சவுன்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,300 Mah  பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

LG V40 தின்க்யூயூ ஸ்மார்ட்போன் புதிய அரோரா பிளாக், புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo