Lava யின் Dragon பக்கா மாஸ் போன் அறிமுகம் கம்மி விலையில் நச்சுனு இருக்கும் வேற லெவல் அம்சம்

HIGHLIGHTS

Lava இந்திய சந்தையில் இன்று அதன் Lava Blaze Dragon 5G அறிமுகம் செய்தது

இந்த போனில் 5,000mAh பேட்டரியுடன் AI கேமரா போன்ற பல அம்சங்கள் இருக்கிறது

Lava Blaze Dragon 5G யின் 4GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9,999

Lava யின் Dragon பக்கா மாஸ் போன் அறிமுகம் கம்மி விலையில் நச்சுனு இருக்கும் வேற லெவல் அம்சம்

Lava இந்திய சந்தையில் இன்று அதன் Lava Blaze Dragon 5G அறிமுகம் செய்தது இந்த போனில் 5,000mAh பேட்டரியுடன் AI கேமரா போன்ற பல அம்சங்கள் இருக்கிறது, மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Blaze Dragon 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Lava Blaze Dragon 5G யின் 4GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9,999. இந்த போன் கோல்டன் மிஸ்ட் மற்றும் மிட்நைட் மிஸ்ட் கலர்களில் கிடைக்கிறது. இந்த போன் ஆகஸ்ட் 1 முதல் நாட்டில் அமேசானில் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும். கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, கஸ்டமர்கள் அமேசானின் கூட்டாளர் பேங்க் மூலம் ரூ.1,000 பேங்க் தள்ளுபடியைப் பெறலாம். வாங்குபவர்களுக்கு ரூ.1,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். கஸ்டமர் வீட்டிலிருந்தே லாவாவின் இலவச சேவையைப் பெற முடியும்.

Lava Blaze Dragon 5G சிறப்பம்சம்.

Lava Blaze Dragon 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.74 இன்ச் யின் HD+ 2.5D டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இதன் ரெசளுசன் 720×1,612 பிக்சல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது மேலும் இதில் 20:9 எஸ்பெக்ட் ரேசியோ வழங்குகிறது.

மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், snapdragon 4 Gen சிப்செட் வழங்குகிறது, இது 4GB LPDDR4x RAM மற்றும் 128GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் 4GB வரை வெர்சுவல் RAM அதிகரிக்க சப்போர்ட் செய்கிறது. இந்த போன் Android 15 இயக்க முறைமையில் இயங்குகிறது. நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு OS அப்டேட்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களையும் உறுதியளிக்கிறது.

இதையும் படிங்க Nothing Phone யில் அடி தூள் ஆபர் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் துக்குங்கபா அந்த தங்கத்தை

இதன் கேமராவை பற்றி பேசினால், இதில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, 50 மெகாபிக்சல் மெயின் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது.

இந்த போனில் 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த தொலைபேசியில் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் முகம் திறக்கும் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo