Lava யின் புதிய போன் 50MP AI கேமரா அம்சத்துடன் அறிமுகம் குறைந்த விலையில் பக்கா மாஸ் அம்சம்

HIGHLIGHTS

Lava இன்று இந்தியாவில் அதன் குறைந்த விலை போனானLava Blaze AMOLED 2 5G அறிமுகம் செய்துள்ளது

Lava Blaze AMOLED 2 5G யின் 6GB/128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,499

ந்த போன் Feather White மற்றும் Midnight Black போன்ற இரண்டு வண்ணங்களில் வருகிறது

Lava யின் புதிய போன் 50MP AI கேமரா அம்சத்துடன் அறிமுகம் குறைந்த விலையில் பக்கா மாஸ் அம்சம்

Lava இன்று இந்தியாவில் அதன் குறைந்த விலை போனானLava Blaze AMOLED 2 5G அறிமுகம் செய்துள்ளது , மேலும் இந்த போன் (6.67”) FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இந்த போன் குறைந்த விலையில் 50MP AI கேமரா அம்சம் கொண்டிருக்கும் மேலும் இதன் விலை தகவல் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Blaze AMOLED 2 5G விலை தகவல்.

Lava Blaze AMOLED 2 5G யின் 6GB/128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,499. இந்த ஸ்மார்ட்போன் அருகிலுள்ள ரீடைலர் கிடைக்கும், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 16 முதல் இ-காமர்ஸ் தளமான Amazon இல் தொடங்கும். இந்த போன் Feather White மற்றும் Midnight Black போன்ற இரண்டு கலர்களில் வருகிறது. இந்த போன் மூலம் வீட்டிலேயே இலவச சேவையை நிறுவனம் உறுதியளிக்கிறது.

Lava Blaze AMOLED 2 5G சிறப்பம்சம்.

Lava Blaze AMOLED 2 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இது முழு HD + ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது.

இதையும் படிங்க Oppo K13 Turbo மற்றும் K13 Turbo Pro பவர்புல்லான 7000mAh பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

இந்த ஃபோன் MediaTek Dimensity 7060 சிப்செட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 6GB LPDDR5 ரேம் மற்றும் 6GB வெர்சுவல் ரேம் மற்றும் 128GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு மூலம் அதிகரிக்கலாம். இந்த ஃபோன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், Blaze AMOLED 2 5G பின்புறத்தில் AI சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த தொலைபேசியில் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் இதனுடன் இதில் 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 இயக்க முறைமையில் இயங்குகிறது. நிறுவனம் 1 ஆண்ட்ராய்டு மேம்படுத்தல் மற்றும் 2 வருட செக்யுரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது. இந்த போனில் திக்னஸ் 7.55 mm இருந்த போதிலும் மெல்லிய டிசைன் கொண்டுள்ளது ஆகும். பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo