Itel யின் புதிய போன் AI அசிஸ்டன்ட் அம்சங்களுடன் வெறும் ரூ,6499 யில் அறிமுகம்
itel இந்திய சந்தையில் அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அசத்தலான போன் கொண்டு வந்துள்ளது
இந்தியாவில் ஐடெல் A90 போனின் 4GB + 64GB வேரியண்டின் விலை 6,499 .
இதன் 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 6,999 ஆகும்.
itel இந்திய சந்தையில் அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அசத்தலான போன் கொண்டு வந்துள்ளது மேலும் இதன் விலை ரூ,7000க்கு குறைவாக வாங்கலாம் இந்த போனில் இது 6.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இதில் நிறுவனம் டைனமிக் பார் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இந்த போன் 13 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமராவுடன் வருகிறது. மேலும் இதன் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Itel A90 விலை மற்றும் விற்பனை தகவல்.
இந்தியாவில் ஐடெல் A90 போனின் 4GB + 64GB வேரியண்டின் விலை 6,499 . இதன் 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 6,999 ஆகும். நிறுவனம் இந்த போனை ஸ்டார்லிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் டைட்டானியம் கலர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வாங்குவதற்குக் கிடைக்கிறது, மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் விற்பனைக் கடைகளில் இருந்து வாங்கலாம் .
இதனுடன் சில கவர்ச்சிகரமான சலுகைகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த போனுக்கு 100 நாள் இலவச திரை மாற்று வாரண்டியும் , 3 மாத ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
Itel A90 சிறப்பம்சம்.
- டிஸ்ப்ளே : ஐடெல் A90 6.6-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது. இதனுடன், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே மற்றும் டைனமிக் பார் போன்ற அம்சங்களும் கிடைக்கின்றன, இதன் மூலம் பயனர் ஸ்க்ரீனை முழுமையாக இயக்காமலேயே பேட்டரி, கால்கள் மற்றும் நோட்டிபிகேசன் போன்ற முக்கியமான தகவல்களைப் வழங்குகிறது .
- ப்ரோசெசர்: இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் T7100 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது,மேலும், இதில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிசனில் இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஸ்டோரேஜ்: ஐடெல் A90 4 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி வெர்ஜூவல் ரேமின் கக்சன் சப்போர்டுடன் வருகிறது, இதில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது.
- AI பவர்ட் அசிஸ்டன்ட் ஐவானா 2.0: ஐடெல் A90 இன் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் அதன் இன்டெர்னல் AI அசிஸ்டன்ட் ஐவானா 2.0 ஆகும். இந்த ஸ்மார்ட் அசிஸ்டென்ட் ஆவணங்களிலிருந்து பதிலளிப்பது, கேலரியில் இருந்து இமேஜ் விவரிப்பது, வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால்களை செய்வது மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது. பிராண்டின் கூற்றுப்படி, இது தொடக்க நிலைப் பிரிவில் இதுபோன்ற முதல் அம்சமாகும்.
- கேமரா: போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 13MP ப்ரைமரி பின்புற கேமரா உள்ளது. இது அட்வான்ஸ் இமேஜ் ப்ரோசெசிங் மற்றும் ஸ்லைடிங் ஜூம் பட்டன் மூலம் அற்புதமான போட்டோ பிடிக்கிறது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 8MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- பேட்டரி: ஐடெல் A90 ஒரு பெரிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதனுடன் 10W சார்ஜர் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்த போனில் 15W வரை சார்ஜ் செய்வதை சப்போர்ட் செய்கிறது .
- மற்றவை: இது IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் ரெசிஸ்டன்ட் எதிராக பாதுகாக்கிறது. கஸ்டமர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்த போனில் ஃபேஸ் அன்லாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐடெல் A90, DTS லைக்ஹ்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது பயனர்களுக்கு ஒரு சிறந்த, தெளிவான மற்றும் அதிவேக ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க Motorola யின் புதிய போன் அறிமுகம் செய்த குஷியில் பழைய Motorola Razr 50 Ultra அதிரடி டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile