Iphone 11 டைப் C சார்ஜருடன் செப்டம்பர் 10 தேதி அறிமுகமாகும்.

Iphone 11 டைப் C சார்ஜருடன்  செப்டம்பர் 10 தேதி அறிமுகமாகும்.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 11 மாடலில் 5வாட் சார்ஜருக்கு மாற்றாக யு.எஸ்.பிUSB . டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019 ஐபோன் சீரிஸ் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வழக்கம்போல் யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் வழங்கியது. சார்ஜிங் சாதனங்கள் சார்ந்த விவரங்களை வழங்கும் வலைத்தளம் ஒன்றில் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஐபேட் ப்ரோ மாடல்கள் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியான தகவல்களிலும் 2019 ஐபோன்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

புதிய ஐபோன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்டில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படலவாம். இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் ஆப்பிள் வழக்கமான சார்ஜர்களையே வழங்கி வருகிறது. இது யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் ஆகும். இது யு.எஸ்.பி. டைப்-ஏ-வில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது.

புதிய சார்ஜர் தவிர ஐபோன் 11 மாடலில் முந்தைய ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களில் இருந்ததை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஆப்பிளின் ஏ13 சிப்செட், புதிய டேப்டிக் என்ஜின் வழங்கப்படலாம். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo