Infinix Hot 7Pro 6GB ரேம் உடன் வெறும் ரூ.10,000 விலையில் அறிமுகம்.

Infinix Hot 7Pro  6GB ரேம் உடன் வெறும் ரூ.10,000 விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

Infinix நிறுவனம் இந்தியாவில் ஹாட் 7 ப்ரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.19 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும், 2 எம்.பி. இரண்டாவது கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Infinix Hot 7Pro  சிறப்பம்சங்கள்:

– 6.19 இன்ச் 1520×720 பிக்சல் HD . பிளஸ் 18.75:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர் 
– 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12µm பிக்சல்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், f/2.0
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஸ்டீரியோ வைடனிங்
– எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
– 4000Mah பேட்டரி

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. சார்ந்த அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 4000Mah   பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் அக்வா புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. ஜூன் 17 ஆம் தேதி விற்பனை துவங்கும் நிலையில், ஜூன் 21 ஆம் தேதி வரை அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போனினை ரூ.8,999 விலையில் வாங்கிட முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo