ட்ரிப்பில் கேமராக்களுடன் Xiaomi யின் போல்டப்பில் ஸ்மார்ட்போன்.

ட்ரிப்பில் கேமராக்களுடன்  Xiaomi யின் போல்டப்பில் ஸ்மார்ட்போன்.

சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இருப்பினும்  அதன் ஹார்டுவேர் மற்றும் கேமரா பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சியோமி பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தின்படி சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்ற சாதனமாக காட்சியளிக்கிறது. இதில் இரட்டை தாழ் கொண்ட டிஸ்ப்ளே இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாக்கப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் மூன்று கேமராக்களும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் மெகாபிக்சல் விவரஙஅகள் பற்றி எந்த தகவலும் இல்லை.

இதனை பார்க்க சியோமி தலைவர் லின் பின் வெளியிட்ட வீடியோவில் இருந்த ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த வீடியோக்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி எந்த தகவலும் இல்லை. காப்புரிமை புகைப்படங்களில் செல்ஃபி கேமரா வழங்குவதை உணர்த்தும் கட்-அவுட் எதுவும் தெரியவில்லை. இவை சியோமி வெளியிட்ட டீசர்களிலும் காட்சியளிக்கவில்லை.

மூன்று கேமரா கொண்ட காப்புரிமை விண்ணப்பத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மாபர்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ள போதும், இது வர்த்தக ரீதியில் அமலாக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே சியோமி வெளியிட்ட விவரங்களில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் வடிவில் வெற்றிப் பெற்றால் மட்டும் தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo