தடை வந்த பின்னும் கண் கலங்காமல் சாதித்து காட்டிய Huawei, 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்தல்.

தடை வந்த பின்னும் கண் கலங்காமல் சாதித்து காட்டிய Huawei, 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்தல்.
HIGHLIGHTS

சீனா நிறுவனமான Huawei 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதித்துக்கு காட்டியுள்ளது.

சீனா நிறுவனமான Huawei 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதித்துக்கு காட்டியுள்ளது.மேலும் சமீபத்தில்  அமெரிக்கா Huawei ஸ்மார்ட்போனில்  பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் போன்ற வசதிகள் கிடைக்காது ன்று அறிவித்து இருந்தது, அதையும் மீறி மனம் தளராமல் சாதித்து காட்டியது ஜியோ  இதற்கிடையில் பல பயனர்களை இழந்து இருந்தாலும் மீண்டும் தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டு இத்தகைய யூனிட்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஹூவாய் கடந்திருக்கிறது. ஹூவாய் சார்பில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன் விற்பனை நிலவர அறிக்கையில், அமெரிக்க வர்த்தக தடையால் ஹூவாய் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

ஹூவாய் வாடிக்கையாளர்கள் வியாபார குழு கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனையில் 20 கோடி யூனிட்களை 64 நாட்களுக்கு முன்னதாக கடந்துள்ளது. அமோக விற்பனை காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் ஹானர் பிராண்டு எத்தனை ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. அமெரிக்க வர்த்தக தடை விதிக்கப்பட்டதும், ஹூவாய் நிறுவன விற்பனை சரியும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

இருப்பினும் , வல்லுநர் கணிப்பை புறந்தள்ளி, ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு விற்றதை விட அதிக ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு விற்பனை செய்யும் என தெரிகிறது. ஹூவாய் நிறுவன சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஹூவாய் பி30 மற்றும் மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புகைப்பட பிரிவில் முன்னணி நிறுவனம் என பெயர் பெற்றிருக்கிறது.

லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெஜன் லெதர் உடன் வருக்கிறது. சீனாவில் இதன் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.

இதுதவிர கடந்த மாதம் நடைபெற்ற IFA  விழாவில் ஹூவாய் உலகின் முதல் தனித்துவ 5ஜி சிப்செட் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலில் வழங்கப்படும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இத்துடன் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலின் கமோமெரேட்டிவ் எடிஷனையும் அறிவித்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo