HUAWEI P40 Pro மற்றும் P40 Pro Plus சிறந்த OLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.
ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹூவாய் பி40, பி40 ப்ரோ மற்றும் பி40 ப்ரோ பிளஸ் என மூன்று ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
SurveyHUAWEI பி40 சிறப்பம்சங்கள்:
– 6.1 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர்
– ARM மாலி-G76MP16 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9
– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP53)
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை Wi-Fi 802.11 ax, ப்ளூடூத் 5.1 LE, ஜி.பி.எஸ்., NavIC, NFC
– யு.எஸ்.பி. 3.1 டைப்-சி
– 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 22.5 வாட் சூப்பர் சார்ஜ்
HUAWEI பி40 ப்ரோ மற்றும் பி40 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.58 இன்ச் 2640×1200 பிக்சல் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர்
– ARM மாலி-G76MP16 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 256 / 512 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1
– டூயல் சிம் ஸ்லாட்
– ஹூவாய் பி40 ப்ரோ – 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
– 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
– 12 எம்.பி. RYYB பெரிஸ்கோப் கேமரா, f/3.4
– ToF கேமரா
– ஹூவாய் பி40 ப்ரோ பிளஸ் – 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
– 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
– 8 எம்.பி. பெரிஸ்கோப் கேமரா, f/4.4, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
– ToF கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP53)
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை Wi-Fi 802.11 ax, ப்ளூடூத் 5.1 LE, ஜி.பி.எஸ்., NavIC, NFC
– யு.எஸ்.பி. 3.1 டைப்-சி
– 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 40 வாட் சூப்பர்சார்ஜ்
– 27 வாட் / 40 வாட் (ப்ரோ பிளஸ்) வயர்லெஸ் ஹூவாய் சூப்பர் சார்ஜ்
இவற்றில் ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் HD+ பிளெக்ஸ் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 6.58 இன்ச் FHD+ பிளெக்ஸ் OLED குவாட் கர்வ் ஓவர்புளோ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் கிரின் 990 மற்றும் கிரின் 990 5ஜி 7 நானோமீட்டர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக என்.பி.யு.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0 இயங்குதளம் கொண்டிருக்கும் ஹூவாய் பி40 சீரிஸ் மாடல்களில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கைரேகை சென்சார்கள் முந்தைய மாடல்களில் உள்ளதை விட 30 சதவீதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை.
ஹூவாய் பி40 மற்றும் ஹூவாய் பி40 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளாக், டீப் சீ புளூ , ஐஸ் வைட், சில்வர் பிராஸ்ட் மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பி40 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் மற்றும் பி40 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 67,120) மற்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 82,125) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile