ஆறு மாதங்களில் 1.65 கோடி விற்பனை செய்த Huawei-P30-Pro

ஆறு மாதங்களில் 1.65 கோடி விற்பனை செய்த Huawei-P30-Pro

Huawei நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 1.65 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது சர்வதேச விற்பனையில் 53 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. முன்னதாக ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் டி.எக்ஸ்.ஒ. மார்க் தளத்தில் 112 புள்ளிகளை பெற்றிருந்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 
புதிய நிறங்கள் தவிர ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீத்திங் க்ரிஸ்டல் மற்றும் அரோரா என இருவித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் ஹூவாய் பி30 ப்ரோ விலை ரூ.71,990 என நி்ர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Huawei P30 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.47 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– 720 MHz ARM மாலி-G76MP10 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1
– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, OIS
– 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
– 8 எம்.பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, ToF டெப்த் சென்சார், லேசர் AF, PDAF, CAF, AIS
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

இதுதவிர ஸ்மார்ட்போனின் இருபுதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் மிஸ்டி புளு மற்றும் மிஸ்டி லாவெண்டர் நிறங்களில் கிடைக்கிறது. ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் ஸ்மார்ட்போனின் புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய நிறங்கள் தவிர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மிஸ்டி லாவெண்டர் மற்றும் மிஸ்டிக் புளு நிற எடிஷன்களின் விலை மற்றும் விற்பனை பற்றி ஹூவாய் தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான EMUI 10 பீட்டா முன்பதிவுகள் துவங்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo