Huawei யின் மடிக்கக்கூடிய Mate X2 ஸ்மார்ட்போன் 50MP கேமராவுடன் அறிமுகமானது.

Huawei  யின் மடிக்கக்கூடிய Mate X2 ஸ்மார்ட்போன் 50MP கேமராவுடன் அறிமுகமானது.
HIGHLIGHTS

இரண்டு டிஸ்பிலேக்கள் கொண்ட சிறந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

போனில் 50 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு கொண்டுள்ளது

4500 எம்ஏஎச் பேட்டரி, 55 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு போன்று உள்புறம் மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
 
புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் OLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.45 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேக்னெட்ரான் நானோ-ஆப்டிக்கல் பிலிம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் கிரீஸ் பகுதியை பெருமளவு மறைக்கிறது. இதன் ஹின்ஜ் பகுதி பைபர் மற்றும் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தை மாடலில் உள்ளதை விட உறுதியாக இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி RYYB பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி RYYB 3x டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 11 ஒஎஸ் கொண்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் ஹார்மனி ஒஎஸ் அப்டேட் பெறும் என ஹூவாய் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இது ஹார்மனி ஒஎஸ் பெறும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 5ஜி பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் வையர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் மேட் எக்ஸ்2 பிளாக், வைட், க்ரிஸ்டல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை 17,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,01,705 என்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை 18,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,12,970 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo