Huawei ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு Q அப்டேட்.
Huawei நிறுவனத்தின் பி30 ப்ரோ மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Surveyபிரபல பி30 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு Q பெற முடியும் என ஹூவாய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.அனைத்து Huawei ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
புதிய அறிவிப்பு ஹூவாய் பி30 ப்ரோ, ஹூவாய் பி30, மேட் 20 ப்ரோ, மேட் 20, மேட் 20 எக்ஸ் மற்றும் மேட் 20 எக்ஸ் (5ஜி) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோருக்கு ஆறுதலாக இருக்கும். தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ டெவலப்பர் புரோகிராம் மேட் 20 ப்ரோ சாதனங்களில் கிடைக்கிறது.
கடந்த மாதம் கூகுள் நிறுவனம் Huawei யுடனான அனைத்து வியாபாரங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் ஆண்டராய்டு இயங்குதளத்தை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. தற்சமயம் இந்த தடை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile