விரைவில் வருகிறது HTC desire 19+ என்ன ஸ்பெஷல் வாங்க பாக்கலாம்.

விரைவில்  வருகிறது  HTC desire 19+  என்ன ஸ்பெஷல்  வாங்க பாக்கலாம்.

இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் ‘ஹெச்டிசி’. தைவானைச்  சேர்ந்த இந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை மையமாக வைத்து சில ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆனால்,  இங்கே பெரிதாக சந்தையைக் கைப்பற்ற முடியவில்லை. 

இந்த மாடல் தைவானில் ரிலீசாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போனின் அறிமுகம் ஹெச்டிசி நிறுவனத்துக்கு இந்தியாவில்  பெரிய கம்பேக்காக இருக்கும் நம்பப்படுகிறது. 

6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, 720×1520 பிக்ஸலில் ரெசல்யூசன், 13 எம்பியில் பிரைமரி  சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 5 எம்பியில் டெரிட்டரி,  டெப்த்-சென்சிங்  சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், அத்துடன் 16 எம்பியில் செல்ஃபி கேமரா, ஒரு நாள் முழுக்க சார்ஜ்  நிற்க 3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம், ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, மீடியா டெக்  ஹெலியோ பி35 பிராசஸர் என அசத்துகிறது இந்த  போன். இந்தியாவில் இதன் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

‘நோக்கியா’வைப் போல நாளடைவில் ஹெச்டிசியும் பின்வாங்கிக் கொண்டது. இப்படி ஒரு  நிறுவனம் இருந்ததா? என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்குத்தான் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு இருந்தது.  இந்நிலையில் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ‘HTC;

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo