Honor 10 lite 6gb ஸ்மார்ட்போன் அறிமுகம்

Honor 10 lite 6gb ஸ்மார்ட்போன் அறிமுகம்
HIGHLIGHTS

Honor 10 lite 6gb ஸ்மார்ட்போன் அறிமுகம்.

 

ஹூவாயின் ஹானர் பிரான்டு ஹானர் 10 லைட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடலில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

இத்துடன் கிரின் 710 சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 2.0, ஆன்ட்ராய்டு 9 பை, EMUI 9.0, புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சங்கள், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபிக்கள், கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் பவர் கொடுக்கப் பட்டுள்ளது.

Honor 10 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.21 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 9.0 பை, EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3400Mah. பேட்டரி

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,370) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo