செப்டம்பர் மாதம் அதன் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்

செப்டம்பர் மாதம் அதன் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்

HMD . குளோபல் நிறுவனம் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஹெச்.எம்.டி. குளோபல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களும் டேர்டெவில் மற்றும் ஸ்டார்-லார்டு எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகின்றன. நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களில் 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 120-டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், பின்புறம் பிங்கர்ப்ரண்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸரும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸரும் வழங்கப்படும் என தெரிகிறது. இதே நிகழ்வில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 110 (2019), நோக்கியா 2720 (2019) மொபைல் போன்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

எனினும், எந்தெந்த மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது குறித்து ஹெச்.எம்.டி. குளோபல் எவ்வித தகவலையும் வழங்கவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக 5ஜி வசதி கொண்ட நோக்கியா 9.1 பியூர்வியூ ஸ்மார்ட்போன், மேம்பட்ட லோ-லைட் மற்றும் வீடியோ அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திற்கு பின் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo