அக்டோபர் 15 அறிமுகமாகும் GOOGLE PIXEL 4 மற்றும் GOOGLE PIXEL 4 XL மொபைல் போன்கள்

அக்டோபர் 15 அறிமுகமாகும் GOOGLE PIXEL 4 மற்றும் GOOGLE PIXEL 4 XL மொபைல் போன்கள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெருமளவு விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி இருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல்புக் 2 அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், நெஸ்ட் மினி மற்றும் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பிக்சல் 3, பிக்சல் 3 XL, பிக்சல் ஸ்லேட், புதிய க்ரோம்காஸ்ட், நெஸ்ட் ஹப் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது.

பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் 3040×1440 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி. சோனி IMX363 + 16 எம்.பி. IMX481 டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகி

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாத 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. செட்டிங்ஸ் செயலியில் இருந்து ஸ்மூத் டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இது 60 முதல் 90 ஹெர்ட்ஸ்களிடையே செட்டிங்கை தானாக மாற்றிக் கொள்ளும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo