Google Pixel 4A விற்பனை தகவல் இன்டர்நெட்டில் வெளியாகியது.

Google Pixel 4A  விற்பனை தகவல் இன்டர்நெட்டில்  வெளியாகியது.

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விற்பனை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி ஜெர்மனியில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மே 22 ஆம் தேதி வோடபோன் ஜெர்மனி மூலம் விற்பனைக்கு வரு தாக கூறப்படுகிறது. 

புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு இதே தேதியில் நடைபெறுமா அல்லது முன்கூட்டியே நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மே 12 முதல் 14 ஆம் தேதி வரை கூகுள் நிறுவனத்தின் ஐஒ டெவலப்பர் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இந்த தேதிகளில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

வோடபோன் ஜெர்மனி வலைதள தரவுகளின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விற்பனை மே 22 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. ஜெர்மனியில் மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் பட்சத்தில் அமெரிக்காவிலும் இதே தேதியில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை பிக்சல் 4ஏ 5.81 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

முன்னதாக பிக்சல் 4 ஸ்மார்ட்போன் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பின் அக்டோபர் 24 ஆம் தேதி விற்பனை துவங்கியது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

புகைப்படங்களை எடுக்க 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 3080 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo