பிக்சல் 3 போனில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சம்

பிக்சல் 3 போனில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சம்
HIGHLIGHTS

ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதேபோன்று XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆன்ட்ராய்டு பி மூன்றாவது டெவலப்பர் பிரீவியூவில் கூகுள் பிரான்டிங் கொண்ட வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது, புதிய வயர்லெஸ் சார்ஜிங் டாக் உருவாக்கப்படுவதை உணர்த்தியிருக்கிறது.

இணைக்கப்ப்ட்ட சாதனங்களில் (கனெக்ட்டெட் டிவைசஸ்) கீழ் புதிய பிரிவை கூகுள் உருவாக்கலாம் என்றும், இவை டிரீம்லைனர் என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இந்த சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருப்பதும் சோர்ஸ் கோடு மூலம் தெரியவந்துள்ளது.

https://static.digit.in/default/74a5b4f6e4a54078518d4e633a65fcf0f012c12e.jpeg

டிரீம்லைனர் சாதனம் முற்றிலும் நிறுவனத்தினுள் சோதனை செய்யப்படும் பட்சத்தில், வெளிப்புறம் இவை சோதனை செய்ய கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் புதிய தகவல்கள் முற்றிலும் சோர்ஸ் கோடு சார்ந்து வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியீடு சமயத்தில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://static.digit.in/default/9d1b00ff1f818e687c4da51a06613b90cfb551e5.jpeg

முன்னதாக வெளியான  புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

கிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்க இருப்பதாக கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo