Black Shark 2 Pro 12 ரேம் மற்றும் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது.

Black Shark 2 Pro 12 ரேம் மற்றும் அசத்தலான அம்சங்களுடன்  அறிமுகமானது.

பிளாக் ஷார்க் நிறுவனம் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பிளாக் ஷார்க் 2 மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 256 ஜி.பி. UFS3.0 மெமரி வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 
ப்ளாக் ஷார்க் 2 இதன் 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 29,950) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 34,945) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக், ஐஸ் ஆஷ், புளு, ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது

Black ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7 என்.எம். பிராசஸர்- 675MHz அட்ரினோ 640 GPU
– 12 ஜி.பி. LPDDR4x ரேம் 
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. 1/3.6″ சாம்சங் S5K3M5 டெலிபோட்டோ லென்ஸ் f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, டூயல்-பேண்ட் வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 mah  பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதசி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமிங் செய்வதற்கென பிரத்யேக டச் அல்காரிதம் மற்றும் பிரத்யேக டி.சி. டிம்மிங் 2.0 வழங்கப்பட்டுள்ளது. இதன் லிக்விட் கூலிங் 3.0 சி.பி.யு.வின் கோர் வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு எஃப்1 காரை தழுவி புதிய லைட்டிங் எஃபெக்ட் கொண்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo