6000Mah பேட்டரி மற்றும் ஸ்னாப்ட்ரான் 855 ப்ரோசெசருடன் Asus ROG 2போன் அறிமுகம்.

6000Mah பேட்டரி  மற்றும் ஸ்னாப்ட்ரான் 855 ப்ரோசெசருடன் Asus ROG 2போன் அறிமுகம்.
HIGHLIGHTS

அசுஸ் ROG போன் 2 மாடலில் 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. UFS 3.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

Asus நிறுவனத்தின் ROG போன் 2 சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ROG போனின் அப்டேட் செய்யப்பட மாடல் ஆகும். கடந்த ஆண்டை போன்றே இம்முறையும் Asus தனது ஸ்மார்ட்போனில் அதிநவீன சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.

அசுஸ் ROG போன் 2 சிறப்பம்சங்கள்:

– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 120 ஹெர்ட்ஸ் OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7 என்.எம். பிராசஸர்
– 675MHz அடிரினோ 640 GPU
– 12 ஜி.பி. LPDDR4x ரேம்
– 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ROG UI
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79
– 13 எம்.பி. 125° அல்ட்ரா-வைடு கேமரா
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா
– முன்புறம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– டி.டி.எஸ். ஹெட்போன்:X7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
– 10வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

அந்த வகையில் அசுஸ் ROG போன் 2 மாடலில் 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 2340×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 640 GPU, 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. UFS 3.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அசுஸ் ROGபோன் 2 கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனம் ROG Kunai Gamepad அறிமுகம்செய்துள்ளது அது Nintendo Switch போன்ற கேமிங் மோட்களை வழங்குகிறது. பயனர்கள் போனின் விளிம்புகளில் இரண்டு பகுதிகளைச் சேர்க்கலாம் அல்லது வயர்லெஸ் கேம்பேடாக ஒன்றாகப் பயன்படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo