iPhone SE (2020) விரைவில் ஆகும் Made in India

iPhone SE (2020)  விரைவில் ஆகும் Made in India
HIGHLIGHTS

Iphone SE 2020 விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதியIphone SE மாடலுக்கு தேவையான பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி

புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபோன்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் 20 சதவீத வரி செலவை குறைக்கும் நோக்கில் புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் தாய்வான் நாட்டு உற்பத்தியாளரான விஸ்ட்ரன் இந்தியாவில் புதிய ஐபோனை உற்பத்தி செய்வதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

சீனாவில் உள்ள உதிரிபகாங்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து புதிய ஐபோன் எஸ்இ மாடலுக்கு தேவையான பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய விஸ்ட்ரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உதிரிபாகங்கள் ஜூலை மாதத்தில் இந்தியா வரும் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. எனினும், இதுவரை பழைய ஐபோன் மாடல்களே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்திய உற்பத்தி தொடர்பாக ஆப்பிள் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo