IPAD 2019 இந்தியாவில் செப்டம்பர் 30தேதியான இன்று விற்பனை.

IPAD  2019 இந்தியாவில் செப்டம்பர் 30தேதியான இன்று விற்பனை.

ஆப்பிள் நிறுவனம் ஐபேட் 7-ம் தலைமுறை 2019 மாடலை புதிய ஐபோன் மற்றும் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுடன் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போதே இவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்தது.

ஆப்பிள் ஐபேட் 7-ம் தலைமுறை மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 29,900 என்றும் 128 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 37,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. வைபை + செல்லுலார் மாடல்களின் விலை முறையே ரூ. 40,900 மற்றும் ரூ. 48,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் IPAD  2019 சிறப்பம்சங்கள்:

– 10.2 இன்ச் 2160×1620 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
– ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
– ஆப்பிள் பென்சில் வசதி
– 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
– 1.2 எம்.பி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
– வைபை, ப்ளூடூத்
– டூயல் மைக்ரோபோன்
– 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
– ஐபேட் ஒ.எஸ்.
– 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 4.2.

அந்த வகையில் ஆப்பிள் புதிய ஐபேட் 10.2-இன்ச் மாடலின் இந்திய விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் விரைவில் இதற்கான முன்பதிவுகளை துவங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo