ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்கள் லாபம் சம்பாரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்கள்  லாபம் சம்பாரித்துள்ளது.

2019 நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகம் ஆகும்.2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் இந்தியா போன்ற சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரித்து உள்ளது.

ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனையில் இருந்து மட்டும் சுமார் 5,150 கோடி டாலர்களும், சேவைகள் பிரிவில் இருந்து 1,250 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது.இந்த காலாண்டு வருவாயில் 60 சதவிகிதம் சர்வதேச விற்பனையில் இருந்து கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதே காலாண்டில் ஐபேட் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஐபேட் வருவாய் 465 கோடி டாலர்களாகவும், ஹோம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் கிடைத்த வருவாய் 650 கோடி.

ஐபோன் விற்பனையில் இருந்து 3,360 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபோன் வருவாய் திட்டம் மேம்பட்டு இருந்தாலும், இதன் மூலம் கிடைத்த வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவு ஆகும். மேக் சாதனங்களால் கிடைத்த வருவாய் சரிந்துள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo