108MP கேமரா கொண்ட MI NOTE 10 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.
சியோமி Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 108 எம்.பி. கேமரா, இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது
புதிய அறிக்கையின்படி, சியோமி தனது மி நோட் 10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
சீன எலக்ட்ரிக் நிறுவனமான சியோமி சமீபத்தில் தனது 108 எம்பி கேமரா மி நோட் 10 ஐ உலகளவில் அறிமுகப்படுத்தியது மற்றும் இதன் விலை 549 யூரோக்கள் (ரூ. 43,205 தோராயமாக). உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு, சாதனத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதாக தகவல்கள் வந்துள்ளன. 91 மொபைல்களின் புதிய அறிக்கையின்படி, சியோமி தனது மி நோட் 10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் இந்தியாவில் ரூ .45,000 வரம்பில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SurveyMI NOTE 10 SPECIFICATIONS
சர்வதேச சந்தையில் Mi நோட் 10 பெயரில் வெளியான சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சியோமி நிறுவனம் போகோ எஃப்1 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.
அந்த வரிசையில் Mi நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் இது ஒன்பிளஸ் 7டி மற்றும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். Mi நோட் 10 முழுமையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இல்லை என்ற போதும், இதன் 108 எம்.பி. பிரைமரி கேமரா தனித்துவம் மிக்க அம்சமாக இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 108 எம்.பி. கேமரா, இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 108 எம்.பி. சென்சாருடன் 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.
MI NOTE 10 PRICE
Mi Note 10 யில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 549 Euros (Rs 43,205 சுமார் இருக்கும்.) 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை 649 யூரோக்களில் (ரூ. 51,105 தோராயமாக) வைக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile