மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கமல் இருக்கு காரணத்தால் தற்பொழுது இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
Surveyஇதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல் போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.
அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கமல் இருக்கு காரணத்தால் தற்பொழுது இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது?
- முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
- அதில், Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.
- அதன் பிறகு அடுத்த பக்கத்தில், Service Connection Number என்று கேட்கப்படும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.
- தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணின் கடைசி எண் உங்களுக்காக தெரியும். அதனை சரியானதா என்று பார்த்து கொள்ளவும், உடனே அந்த பக்கம் சமர்பிக்கப்பட்டவுடன் அந்த எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
- அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து பதிவு செய்யவும்.
- அதற்கு அடுத்ததாக, இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் பதிவாகிவிடும்.
- OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். அங்கு கேட்கும் கேப்ட்சாவை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.
- அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
