புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் IOS .பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுவிட்டது. தற்சமயம் IOS பீட்டா பதிப்பினை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
Surveyவாட்ஸ்அப் IOS . பீட்டா 2.19.90 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் தனது மெமோஜிக்களில் அதிகளவு கஸ்டமைசேஷன்களை அறிமுகம் செய்தது. இதில் சிகை அலங்காரம், ஏர்பாட்ஸ் போன்றவை இடம்பெற்றிருந்தன.
மெமோஜி பயன்பாட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆப்பிள் நிறுவனம் மெமோஜி ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. மெமோஜி ஸ்டிக்கர்கள் ஏ9 அல்லது அதன்பின் வெளியான சிப்செட் இருக்கும் ஐ.ஒ.எஸ். சாதனங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐ.ஒ.எஸ். 2.19.23 பதிப்பில் வாட்ஸ்அப் ஃப்ரம் ஃபேஸ்புக் எனும் லேபெல் இடம்பெற்றிருக்கிறது.
பிங்கர்ப்ரின்ட் லாக் அம்சத்தை ஆன் செய்தால், கைரேகையை உறுதிப்படுத்தக் கோரும். பயனர்கள் மெசேஜ் மற்றும் கால்களுக்கு நோட்டிஃபிகேஷன் பேனலில் இருந்த படியே பதில் அளிக்க முடியும். இந்த அம்சம் செயலி லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
முன்னதாக இதேபோன்ற லேபெல் ஆண்ட்ராய்டு தளத்தில் காணப்பட்டது. இந்த டேக் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் காணப்படுகிறது. பயோமெட்ரிக் அம்சத்தை பொருத்தவரை வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இதனை பிரைவசி செட்டிங் — அக்கவுண்ட் ஆப்ஷனில் காணப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile