TrueCaller போன்ற ஆப்க்கு TRAI யின் அதிரடி நடவடிக்கை டேட்டா ஷேரிங் இனி பயங்கர கடுமை

TRAI விரைவில் TrueCaller போன்ற மேனேஜ்மென்ட் ஆப்யில் டேட்டா ஷேரிங் போன்றவற்றை கடுமையாக்கியுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், TCCCPR (டெலிகாம் கமர்சியல் கம்யூனிகேஷன் கஸ்டமர் ரெகுலேஷன் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்யத் தயாராகி வருகிறது. பயனர்களால் புகாரளிக்கப்பட்ட ஸ்பேம் தொடர்பான தகவல்களை, கால் மேனேஜ்மென்ட் ஆப்கள் ஒழுங்குமுறை ஆணையத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு விதியைச் சேர்க்கும் வகையில், இந்த ஒழுங்குமுறையைத் திருத்துவதற்கான ஒரு ரிப்போர்ட்டை முன்வைக்கப்பட்டுள்ளது.

‘ஸ்பேம்’ (spam) என வகைப்படுத்தப்பட்ட ‘1600’ மற்றும் ‘140’ ஆகிய முன்னொட்டுகளுடன் தொடங்கும் கால்களை , கால் மேனேஜ்மென்ட் ஆப்கள் (call management apps) மூலம் தடுப்பது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, Truecaller, Hiya மற்றும் Whoscall போன்ற அழைப்பு மேலாண்மைச் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) அந்த ஆணையம் முன்னதாகவே வலியுறுத்தியிருந்தது.

கால் மேனேஜ்மென்ட் ஆப்யில் தயார்.

ட்ரூ காலர் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷித் ஜுன்ஜுன்வாலா, டிராயின் முடிவை விமர்சித்திருந்தார். இது தொடர்பாக டிராய் தற்போது ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வர்த்தகத் தொடர்புகளுக்கான ஒழுங்குமுறையான TCCCPR-ஐ திருத்துவதற்கு அந்த ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருகிறது. இந்தத் திருத்தத்தை அரசாங்கம் விரைவில் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டு வருகின்றன.

தற்போது, ​​காலிங் மேனேஜ்மென்ட் ஆப்களில் பயனர்களால் ஸ்பேம் எனக் குறிக்கப்பட்ட நம்பர்கள் குறித்த டேட்டாக்கள் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்துடன் பகிரப்படுவதில்லை. TCCCPR-யில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திருத்தத்தின்படி, TrueCaller போன்ற செயலிகள் இந்தத் டேட்டாக்களை TRAI-உடன் பகிர வேண்டியிருக்கும். இந்தத் தரவுகளில், செயலிகளில் பயனர்களால் குறிக்கப்பட்ட எண்கள், அழைப்புகளைப் பெற்ற பயனர்கள் மற்றும் கால்கள் மேற்கொள்ளப்பட்ட நேரம் குறித்த விவரங்கள் அடங்கும்.

இதையும் படிங்க :oho இந்தியாவில் அரசு பள்ளிக்காக AI லேர்னிங் Classes 2.0 அறிமுகம் செய்துள்ளது, இதை மணி வேம்பு தொடங்கிவைத்தார்

TRAI விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி, செபி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDA ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே 1600 தொடரில் உள்ள தொலைபேசி எண்கள் உரியவை என்று டிராய் தனது சமீபத்திய வழிகாட்டுதல்களில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த எண் தொடர், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தகவல்தொடர்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நம்பரில் தொடங்கும் எண்களை TCCCPR-இன் கீழ் எந்தவொரு தளம் அல்லது செயலியாலும் தடுக்க முடியாது.

1600-யில் தொடங்கும் நம்பர்கள் பில்ட்டர் அல்லது ஸ்பேம் கால்களாக குறியிடவோ முடியாது என்றும் அது குறிப்பிடுகிறது. TRAI DND ஆப் மூலம் 140 சீரிசிளிருந்து மட்டுமே தடுக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :