TRAI யின் புதிய ரூல் டேட்டா முக்கியமில்லை ஆனால் வொயிஸ் SMS கட்டாயம் இருக்க வேண்டும்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு கன்ஸ்யூமர் ப்ரொடெக்ஷன் (பதின்மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026-ஐ வெளியிட்டுள்ளது. இது, டெலிகாம் நிறுவனங்கள் அதிக வொயிஸ் மற்றும் மெசேஜ் (SMS) மட்டும் கொண்ட ரீசார்ஜ் விருப்பங்களை வழங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. இந்த ஒழுங்குமுறைகளின்படி, ஒருங்கிணைந்த டேட்டா சேவைகள் தேவைப்படாத கண்ச்யூமருக்கு, சிறப்பு சேவை வழங்குநர்களுக்கு (STVs) பொருத்தமான கட்டணக் குறைப்புகளை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குமுராயம் ஆணையம் ஆனது திங்கட்கிழமை வெளியிடப்பட்டது, அதன் பிறகு இதை பற்றி 1,132 பங்கு தாரர்களிடம் இருந்து கிடைத்துள்ளது மேலும் அதன் செயல்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.

TRAI யின் புதிய விதி என்ன ?

இந்தத் திருத்தத்தின்படி, டெலிகாம் சேவை வழங்குநர்கள் வொயிஸ் மற்றும் மெசேஜ் (SMS) சேவைகளுக்கு பிரத்தியேகமாக, பொருத்தமான கட்டணக் குறைப்புகளுடன் கூடிய சிறப்பு கட்டணச் சீட்டுகளை (STVs) வழங்க வேண்டும். இந்தச் சீட்டுகளில், வெவ்வேறு வேலிடிட்டி காலங்களை உள்ளடக்கிய விருப்பத் தேர்வுகள் இடம்பெற வேண்டும்.

Trai யின் படி இந்த திட்டங்கள் எப்படி மாறும்?

STVs யின் கீழ் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் குறைந்தபட்சம் 30 நாட்களின் கீழ் வொயிஸ் SMSமற்றும் டேட்டா சேவை அம்சம் வழங்கப்படுகிறது , இதனுடன் இதில் தொடர்புடைய வொயிஸ் மற்றும் SMS அம்சங்களும் அடங்கும்.

  • ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் புதுப்பிக்கக்கூடிய செல்லுபடி காலம், மற்றும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அந்தத் தேதி இல்லாத பட்சத்தில், அந்த மாதத்தின் கடைசித் தேதியில் புதுப்பித்தல் நடைபெறும்.
  • வழக்கமான வொயிஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா திட்டங்களுக்கு வழங்கப்படும் நீண்ட கால விருப்பங்களைப் போலவே, நீண்ட வேலிடிட்டி காலத்தைக் கொண்ட, வொயிஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் வழங்கும் குறைந்தபட்சம் ஒரு குறுகிய கால சேவைத் திட்டம் (STV).

TRAI இந்த புதிய விதியை கொண்டு வர காரணம் என்ன?

2024-ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (பன்னிரண்டாவது திருத்தம்) ஒழுங்குமுறைகளுக்குப் பிறகு, குரல் மற்றும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் குறுகிய கால சேவைகளின் (STV) கிடைக்கும் தன்மை குறைவாகிவிட்டதை டிராய் கவனித்ததாகத் தெரிவித்துள்ளது. சேவை வழங்குநர்கள் குறைவான, குறுகிய கால விருப்பங்களை வழங்குவதால், குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் தேர்வுகள் குறைவாகவே இருக்கும் என்று அந்த ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டது.

இதையும் படிங்க iPhone பயனர்களுக்கு Airtel யின் இலவச சலுகை இனி iCloud+, Apple TV மற்றும் Apple Arcade தனியாக காசு வேண்டாம்

இந்தப் புதிய கட்டமைப்பு, குறிப்பாகத் தங்களது மொபைல் திட்டங்களுடன் டேட்டா கனெக்ஷன் தேவையில்லாத கஸ்டமருக்கு , அவர்களின் தேவைகள் மற்றும் நிதித் திறனுக்கு ஏற்ப ரீசார்ஜ்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கலந்தாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, பங்குதாரர்களின் கருத்துக்களையும் தனது சொந்த பகுப்பாய்வையும் பரிசீலித்த பின்னரே இறுதி விதிமுறைகள் வகுக்கப்பட்டதாக டிராய் தெரிவித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :