Zoho இந்தியாவில் அரசு பள்ளிக்காக AI லேர்னிங் Classes 2.0 அறிமுகம் செய்துள்ளது, இதை மணி வேம்பு தொடங்கிவைத்தார்
ஜோஹோ கிளாசஸ் 2.0'( Zoho Classes 2.0 ) என்ற ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அடிப்படையிலான லேர்னிங் அறிமுகம்
மாணவர்கள் வரை கையாளும் தனிப்பட்ட ஆசிரியர்களுக்கும் இந்நிறுவனம் இந்தத் தளத்தை இலவசமாக வழங்கும்
தலைமைச் செயல் அதிகாரியாகப் (CEO) பணியாற்றும் மணி வேம்பு, தொடங்கி வைத்தார்
Zoho நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தயாரிப்பு உரிமக் கட்டணங்கள் இன்றி இலவசமாக வழங்கப்படும் ‘ஜோஹோ கிளாசஸ் 2.0′( Zoho Classes 2.0 ) என்ற ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அடிப்படையிலான லேர்னிங் மேலாண்மை அமைப்பை (LMS) அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சார்ந்த கல்வித் தொழில்நுட்பத்திற்கான அக்சஸ் விரிவுபடுத்தும் நோக்கில், 100 மாணவர்கள் வரை கையாளும் தனிப்பட்ட ஆசிரியர்களுக்கும் இந்நிறுவனம் இந்தத் தளத்தை இலவசமாக வழங்கும்.இதை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் (CEO) பணியாற்றும் மணி வேம்பு, இந்த LMS-ஐ அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
Surveyயார் அந்த மணி வேம்பு ?
அறிக்கைகளின்படி, மணி வேம்பு ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஜோஹோ கார்ப்பரேஷனின் தலைமை இயக்க அதிகாரியாக (COO) பணியாற்றினார். ஜோஹோவின் அணைத்து புது ப்ரோடேக்ட் உருவாக்குவதிலும், தளத்தின் திசையை வடிவமைப்பதிலும், நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் உறவினர் ஆவார். மணியும் ஸ்ரீதர் வேம்புவும் சகோதரர்கள்.
📣 We're happy to announce Zoho Classes 2.0—an AI-powered academic LMS built for educational institutions. It helps bring teaching, learning, student success, and institutional administration together on one platform. 😇
— Zoho (@Zoho) July 15, 2026
As part of our commitment to democratizing access to… pic.twitter.com/FudTO0o8TJ
Zoho Classes 2.0 ஐக் கொண்டுவருவதன் நோக்கம்
ஜோஹோ கிளாசஸ், 100 மாணவர்கள் வரை கற்பிக்கும் திறனுடன், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் தளம், கல்வியையும் மாணவர்களையும் ஒரே, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மூலம் இயங்கும் தளத்தில் ஒன்றிணைக்கிறது. இது 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்கிறது .
மாணவர்கள் 24 மணிநேரமும் செயல்படும் AI பயிற்றுவிப்பாளர் (AI Tutor), மைக்ரோ லேர்னிங் மாட்யுல் (microlearning modules) மற்றும் விளையாட்டு பாணியிலான லேர்னிங் அனுபவங்களைப் வழங்குகிறது . கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ‘Zoho Classes 2.0’ மாணவர் சேர்க்கை முதல் பாடநெறி நிறைவு வரையிலான முழுச் செயல்முறையையும் நிர்வகிக்கிறது; கூடுதல் உதவி தேவைப்படக்கூடிய மாணவர்களை அடையாளம் காண AI-ஐப் பயன்படுத்துகிறது; மேலும், மென்பொருள் உருவாக்குநரின் (developer) உதவி இல்லாமலேயே சேர்க்கை, பாடத்திட்ட மேலாண்மை மற்றும் பிற பணிப்பாய்வுகளுக்கான கஷ்டமைஸ் டூல்களை உருவாக்க உதவும் ‘Low-Code Micro App Builder’ வசதியையும் இது கொண்டுள்ளது.
இதையும் படிங்க ஸ்விக்கியின் Instamart மூலம் LPG சிலிண்டர் டெலிவரி, இனி சரியான நேரத்தில் உடனடியாக கிடைக்கும்
Zoho Classes 2.0 நன்மைகள்
இந்தத் தளம் NAAC, NBA, UGC மற்றும் NMC அங்கீகாரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, தேசியக் கல்விக் கொள்கை 2020-உடனும் இணக்கமாக உள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கு, இது திறன் கண்காணிப்பு, மருத்துவப் பதிவேடு மேலாண்மை மற்றும் தணிக்கைக்குத் தயாரான ஆவணங்கள் உள்ளிட்ட பவர் அடிப்படையிலான மருத்துவக் கல்விப் பணிப்பாய்வுகளை சப்போர்ட் செய்கிறது .
- மாணவர்களுக்கு: 24/7 ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயிற்றுநர்கள் உள்ளனர், மேலும் மைக்ரோ லேர்னிங் மற்றும் விளையாட்டுமயமாக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் கற்றல் சுவாரஸ்யமாக்கப்பட்டுள்ளது.
- கல்வி நிறுவனங்களுக்கு: இது ஒரு மாணவரின் சேர்க்கை முதல் கோர்ஸ் முடியும் வரையிலான பயணத்தைக் கண்காணிக்கிறது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்படுத்தி, பின்தங்கியுள்ள மாணவர்களை இது கண்டறிகிறது. மேலும், கோடிங் இல்லாமல் கஸ்டம் டூல்களை உருவாக்குவதற்கான லோ-கோட் மைக்ரோ-ஆப் பில்டரையும் இது கொண்டுள்ளது.
- தனது புதிய தளம் இந்தியாவில் டேட்டாக்களை சேமிப்பதாகவும், நாட்டின் டிஜிட்டல் தனிநபர் டேட்டா பாதுகாப்புச் சட்டத்திற்கு (DPDP) இணங்குவதாகவும் ஸோஹோ உறுதியளிக்கிறது. இன்றுவரை, இது 1 மில்லியனுக்கும் அதிகமான அசைன்மென்ட் சமர்ப்பிப்புகளையும், 2TB-க்கும் அதிகமான வீடியோ கண்டெண்டை கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile