instamart cylider delivery
Instamart அதன் ஹிந்துஸ்த்தான் பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட் (HPCL) உடன் சேர்ந்து LPG சிலிண்டர் டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக அதிவேகமாக டெலிவரி செய்யும் முதல் இ-காமர்ஸ் தளம் ஆகும், இதன் மூலம் மணி கணக்காக நாள் காணக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த சேவையின் நன்மை மற்றும் இது யாருக்கெல்லாம் பயன் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
இந்த சேவை முதல் முறையாக பெங்களூரில் கிடைக்கும், இதன் மூலம், நுகர்வோர் HPCL-யின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ எடை கொண்ட ‘HP Navya’ கூட்டுப்பொருள் (composite) LPG சிலிண்டரை ‘Instamart’ ஆப் வழியாக ஆர்டர் செய்யலாம். இத்தளம் HPCL-இன் 5 கிலோ எடை கொண்ட மெட்டல் LPG சிலிண்டரையும் வழங்கும்.
Swiggy’s Instamart launches LPG cylinder delivery in partnership with HPCL
— Harsh Upadhyay (@upadhyay_harsh1) July 15, 2026
Interesting move pic.twitter.com/u9F8GBr1iG
நிருவனதின்படி நீங்கள் இன்ஸ்டமார்டில் சிலிண்டர் வாங்க விரும்பினால், இதற்காக ஏற்கனவே LPG கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் தான் இதை பெற முடியும் என்பது இல்லை, மற்றும் இந்த சேவையானது, மாணவர்கள், அடிகடி வெளி ஊரு செல்பவர்களுக்கு மற்றும் சிறிய மற்றும் வாடகை வீட்டுகாரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க பல்லாயிரகணக்கான சேவைகளுக்கு ஒரே ஆப் ஆன UMANG யில் டேட்டா லீக்
இந்த சேவையின் கீழ் முதல் முறையாக சிலிண்டர் ஆர்டர் செய்பவரை புதிய சிலிண்டர் வாங்கிய கஸ்டமர் என வைக்கப்படும், அதன் பிறகு அந்த சிலிண்டர் தீர்ந்து போகும்போது காலி சிலிடர் கொடுத்த பிறகு மீண்டும் நிரப்ப பட்ட சிலிண்டர் டெலிவர் செய்யப்படும்.
ஆர்டர் HPCL-யின் அங்கீகரிக்கப்பட்ட டிஸ்ட்ரிப்யூட்டார் நேத்வார்க்கின் மூலம் நிறைவேற்றப்பட்டு, பாதுகாப்பு மற்றும் விதிமுறைத் தேவைகளைப் பின்பற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களால் டெலிவரி செய்யப்படும் . முதல்முறை கஸ்டமர்கள் , ஆர்டர் செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாகத் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறையையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
இன்ஸ்டாமார்ட் 22020 யில் அறிமுகம் செய்யப்பட்டது இது நாடெங்கும் சுமார் 130 நகரங்களுக்கு மேல் இது செயல்படுகிறது இதனுடன் 50,000க்கும் மேற்பட்ட போர்ட்களின் டெலிவரி வளங்குகுகிறது, இருபினும் HPCL பார்ட்னர்ஷிப் மூலம் LPG சிலிண்டர் டெலிவர் செய்யப்படுவது என்பது முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது மற்றும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட HP Navya உடன் சேர்ந்த கூட்டு டெலிவரி முயற்சி விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்யப்படும்.