ட்ரைவைர் இல்லாத பஸ் தயாரிக்கும் சிங்கப்பூர் தற்பொழுது சோதனை.

HIGHLIGHTS

இந்த பஸ்களை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி. என்ஜினீயரிங் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

பஸ்கள் வார நாட்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், நான்கு மணிநேரம் மட்டுமே செல்லும்.

ட்ரைவைர் இல்லாத பஸ்  தயாரிக்கும் சிங்கப்பூர்  தற்பொழுது சோதனை.

சிங்கப்பூரில் மக்கள் போக்குவரத்தில் டிரைவர் இல்லாத பஸ் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது. டிரைவர் இல்லாத பஸ் இதற்கான பஸ் வடிவமைப்பு, தொழில்நுட்ப பணிகள் ஆகியவை நடந்து வந்தன. இதற்காக பல கட்ட சோதனை நடந்து வந்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ள டிரைவர் இல்லாத பஸ்களை கட்டு பாட்டு அறையில் இருந்து இயக்குவார்கள். சோதனை ஓட்டத்தில் நான்கு டிரைவர் இல்லாத மினி பஸ்கள் இயக்கப் படுகின்றன.இதற்கிடையே டிரைவர் இல்லாத பஸ்களின் பொது சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. 

மொபைல் ஆப் மூலம் சென்டோசா தீவில் 5.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் சுற்றி வரும். இந்த பஸ்கள் சில்சோ பாயிண்ட் கடற்கரை ஸ்டேசன், பலாவன் கடற்கரை, டான்ஜோங் கடற்கரை மற்றும் சென்டோசா கோல்ப் கிளப் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. டிரைவர் இல்லாத பஸ் களில் பயணம் செய்ய ‘ரைடு நவ் சென்டோசா’ என்ற மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிரைவர் இல்லாத பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி. என்ஜினீயரிங் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

பஸ்கள் வார நாட்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், நான்கு மணிநேரம் மட்டுமே செல்லும்.

இதுகுறித்து அந்நிறுவனம், போக்குவரத்து அமைச்சகம், சென்டோசா மேம்பாட்டு கழகம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், “டிரைவர் இல்லாத பஸ்களில் சாலையில் நடந்து  செல்பவர்கள், பாதசாரிகளை அறிந்து கொள்ளும் வகையிலும் தானியங்கி முறையில் இயங்குகின்றன என்பதை குறிக்கவும் மின்னணு அடையாளங்களை காண்பிக்கும்.

இந்த பஸ்களில் பொருத்தமான வழியில் செலுத்தல், தடைகள் மற்றும் அடையாளங்களை காண உதவும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன என்று கூறி உள்ளது. பஸ்களில் ஒரு டிரைவர் இருப்பார். அவர் பஸ்சில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் வாகனத்தை இயக்குவார்.

சிங்கப்பூரில் ஏற்கனவே தானியங்கி டாக்சி, டிரக் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தானியங்கி பஸ் சோதனை ஓட்டத்தை நடத்துகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo