இனி நீங்கள் 50,000 ஆயிரம் வரை பணம் அனுப்ப ஆதார் கார்ட் இருந்தால் மட்டும் போதும் அது எப்படி வாங்க பாக்கலாம்.

இனி  நீங்கள் 50,000 ஆயிரம்  வரை பணம் அனுப்ப  ஆதார்  கார்ட்  இருந்தால் மட்டும் போதும் அது எப்படி வாங்க பாக்கலாம்.

அதாவது சமீபத்தில்  பணம்  மாற்றம்  ஏற்பட்ட பொது மக்கள் பல பேரிடம் பேன்கார்ட் இல்லாமல்  பலருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது  மேலும்  பலர்  தங்களிடம்  பணம்  இருந்தாலும்  ஒரே முறையில் 50 ஆயிரம் வரை அனுப்ப முடியாமல் போனது , பேன் கார்ட்  என்பது அனைவரும் வைத்திருப்பது  என்பது சாத்தியம் இல்லை, ஆனால்  ஆதார் கார்ட்  என்பது  சிறியவர் முதல் பெரியவர் வரை  அனைவரிடமும்  இருக்கிறது.இத்தகைய பிரச்சனை மனதில்  வைத்து  அதிகமான  பணம்  ட்ரான்சாக்ஸன் செய்ய இனி நீங்கள் ஆதார் கார்ட்  வைத்து நீங்கள் பணம் அனுப்ப முடியும் என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி செலுத்துபவர்கள் எளிமையாகவும், வசதியாகவும் வருமானவரியை தாக்கல் செய்யும் வகையில், ஃபான் மற்றும் ஆதார் அட்டையை பயன்படுத்த நிதியமைச்சர் பரிந்துரைந்துள்ளார். அதாவது இதன்மூலம் ஃபான் கார்டு இல்லாதவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவதன் மூலம் வருமான வரியை மேலும் அவர்கள் ஃபான் எண்ணை குறிப்பிட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மக்களுக்கு அளித்திருக்கும் மகிழ்ச்சி தகவலில் ஆதாரும் ஒன்று. அதாவது, 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைக்கு இனி பான் நம்பர் கட்டாயம் இல்லை.பான் கார்டுக்குப் பதில் ஆதாரையோ, ஆதாருக்குப் பதில் பான் எண்ணையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தற்போது, அனைவரிடமும் ஆதார் அட்டை இருப்பதால், ஒருவர் பான் கார்டு நம்பரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வங்கிகளில் ரூ.50,000-த்துக்கும் மேல் பணபரிவர்த்தனை செய்ய, வருமான வரி செலுத்த உள்ளிட்ட பான் கார்டுகள் அவசியம் தேவை என்ற நடைமுறைகளில் அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பான் கார்டை விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரே வசதி மிக்கது என்றும் பான் கார்ட் தேவை இல்லை அப்படி என்றால் பான் கார்ட் பயன்பாட்டில் இருக்காதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால் ஆதாரும், பான் நம்பரும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். மக்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக பேசிய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் வைத்திருப்பதாகவும், 20 கோடி பேரிடம் பான் கார்ட் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo