RBI new rule
டிஜிட்டல் முறையில் பணம் ஒருவருவருக்கு ஒருவர் மாற்றப்படுகிறது, இருப்பினும் மக்கள் தொடர்ந்து பல்லாயிரகணக்கான பணத்தை மக்கள் இழந்து வருகிறார்கள் இது போன்ற பிரச்சனையை சமாளிக்க ரிஸர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) அதன் கஸ்டமர்களுக்கு ஜனவரி 1,2027, முதல் புதிய ரூல் கொண்டு வர இருக்கிறது, அதாவது பாதிக்கப்பட்டவர் ரூ,25,000 முதல் நிவாரண தொகை பெறலாம் என கூறியுள்ளது, இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி இப்பொழுது இருக்கும் மேலும் இழந்த தோயை யார் கொடுப்பார் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Google Pay, Phonepe மற்றும் Paytm போன்ற டிஜிட்டல் ட்ரேன்ஸ்செக்ஷன் தற்பொழுது அதிகரித்துள்ளது, மேலும் இந்த செயல்முறையானது ஒரூ வகையில் எளிமையானதாக இருந்தாலும், அதே அளவுக்கு பாதகமும் இருக்கிறது டிஜிட்டல் ட்ரேன்ஸ்செக்ஷன் பணம் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை சமாளிக்க மற்றும் இழந்த பணத்தை பெறுவதற்க்கான நிவாரம் அளிக்கிறது, அதாவது நீங்கள் ரூ,50,000 வரை மோசடிக்காரர் பணம் கொள்ளையடித்து இருந்தால், பாதிக்கப்பட்டவர் 85% சதவிகிதம் அதாவது ரூ,25,000 வரை பெறலாம். இதன் மூலம் பணத்தை இழந்தவர்களின் மனதிற்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும்.
தகுதி பெறுவதற்கு, பாதிக்கப்பட்டவர் மோசடியைக் கண்டறிந்த ஐந்து நாட்களுக்கு, பேங்க்க்கும் , தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளம் (National Cyber Crime report portal)அல்லது 1930 என்ற உதவி நம்பரிலும் அதைப் புகாரளிக்க வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் புகார்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது. ஒரு புகார் பதிவு செய்யப்பட்டவுடன், மேலும் அங்கீகரிக்கப்படாத ட்ரேன்ஸ்செக்ஷன் களைத் தடுக்கவும், உள்நாட்டு மோசடிகளுக்கு 45 நாட்களுக்குள்ளும், எல்லை தாண்டிய வழக்குகளுக்கு 60 நாட்களுக்குள்ளும் வழக்கைத் தீர்க்கவும் பேங்க் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி எடுக்காத பட்ஜெட்டில் அதற்க்கு முழு பொறுப்பு பேங்க் ஆகும்.
செலவில் முக்கிய பொறுப்பை மத்திய வங்கி (central bank) ஏற்கிறது. அதாவது நீங்கள் ரூ. 29,412-க்குக் குறைவான இழப்பிற்கு, 85% இழப்பீடு வழங்கப்படும். இதில் ரிசர்வ் வங்கி (RBI) 65 சதவீதத்தையும், வாடிக்கையாளரின் வங்கி 10 சதவீதத்தையும், பயனாளி வங்கி 10 சதவீதத்தையும் பங்களிக்கின்றன. ரூ. 29,412 முதல் ரூ. 50,000 வரையிலான இழப்புகளுக்கு (அதாவது ரூ. 25,000 செலுத்தப்படும் நிலையில்), ரிசர்வ் வங்கி ரூ. 19,118-ஐயும், மற்ற இரு வங்கிகளும் தலா ரூ. 2,941-ஐயும் வழங்குகின்றன; எனினும், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, இழப்பின் பெரும்பகுதியை வாடிக்கையாளரே ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தப் புதிய கட்டமைப்பில் வேகம் தான் எல்லாமே. மூன்றாம் தரப்பு மீறல் வழக்குகள் மற்றும் இழப்பீட்டுத் திட்டம் ஆகிய இரண்டிற்கும், அறிவிப்பில் ஐந்து நாள் காலக்கெடு மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.
புகாரளிப்பதை எளிதாக்கும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் புகார் வழிமுறைகளை வழங்குமாறு பேங்க்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
போன பேங்கிங் சேவை, மெசேஜ், இன்ஸ்டன்ட் மெசேஜ் , பிரத்யேக ஈமெயில் முகவரி, IVR, பிரத்யேக டோல் ப்ரீ நம்பர் , சொந்தக் கிளைப்ரேன்ஜ்க்கு க்குத் தகவல் தெரிவித்தல் போன்ற வழிகள் மூலம் கஸ்டமர்களுக்கு 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் அணுகலை பேங்க்கள் வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.
பேங்க்கள், ட்ரேன்ஸ்செக்ஷன் எச்சரிக்கை மேசெசிலே நேரடியாக ஒரு நம்பரை குறிப்பிட வேண்டும். இதன் மூலம், சந்தேகத்திற்கிடமான மெசேஜை கண்ட உடனேயே நீங்கள் ஒரு மோசடியைப் புகாரளிக்க முடியும். மேலும், பேங்கின் வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்லும் அதற்கான நேரடி லிங்க் ஒன்று கிடைக்க வேண்டும்.
இதையும் படிங்க :வாரி வழங்கும் வள்ளல் Jio அம்பானி பெரிய மனுஷன் தான் வெறும் ரூ,55 யில்1000-க்கும் மேலான live TV சேனல்
நீங்கள் புகாரளித்தவுடன், பேங்க் உங்களுக்கு ஒரு புகார் நம்பருடன் உடனடி ஒப்புகையை(acknoledgement) அனுப்ப வேண்டும். அதன்பிறகு, ஒரு உள்நாட்டு மோசடிப் புகாரை முழுமையாகத் தீர்ப்பதற்கு வங்கிக்கு 45 நாட்களும், எல்லை தாண்டிய புகாருக்கு 60 நாட்களும் அவகாசம் உள்ளது. மேலும் இதன் விரிவான தகவலை பெற ஜனவரி 2027 வரை காத்திருக்க வேண்டும்.